இன்றைய உலகில் புற்றுநோய் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரிய சவாலாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 மில்லியன் மக்களுக்குப் புதிய புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 9.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புற்று நோய் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.
புற்றுநோய்க்கு இன்று உலகம் முழுவதும் பரவலான கவனத்தைப் பெற்று, அதற்காக சிகிச்சை முறைகளும் அதிகரித்து வருகின்றன.
பொதுவாக நுரையீரல், மார்பகம், பெருங்குடல், புரோஸ்டஸ்ட் போன்ற புற்றுநோய்கள் அதிகளவில் உள்ளதாக தகவல் வெளியாகிறது.
புற்றுநோய்க்கு கீரோதெரபி, அறுவைச்சிகிச்சை உள்ளிட்டவை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இதோடு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களால் ஆயுர்வேத சிகிச்சையும் எடுக்கப்பட்டு வருகிறது.
7 நிமிட ஊசி
இந்த நிலையில், நுரையீரல் புற்றுநோய்க்கான புதிய நோயெதிர்ப்பு ஊசி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 7 நிமிட ஊசி என்று அழைக்கப்படுகிறது.
இந்த 7 நிமிட ஊசி அஜோட்டெலிசுமாப் (atezolizumab) என்ற மருத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு இம்யூனோ தெரபி ஆகும். இந்த ஊசி மருந்து இந்தியாவிலும் அறிமுக்கப்படுத்தப்பட்டு, நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
புதிதாக அறிமுகமான இந்த 7 நிமிட ஊசி எனும் ஏடெசோலிசமாப் (atezolizumab) தோலிலும், தோலடியில் செலுத்தப்படும் என கூறப்படுகிறது.
இந்த சிகிச்சையின் செயல்முறை முன்பு நரம்பு வழியாகச் சொட்டு சொட்டாக நோயாளிக்குச் செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது தோலடி ஊசியாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை மேற்கொள்வதற்கான நேரம் என்பது 30 முதல் 60 நிமிடங்களாக குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
புற்றுநோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்க நேரிடுமா? இல்லையா?
இந்த 7 நிமிட ஊசி சிகிச்சையின் போது நோயாளிகள் மருத்துவமனையில் காத்திருக்கவோ படுத்துக் கொண்டிருக்கவோ தேவையில்லை எனவும் இந்தச் செயல்முறையானது நோயாளியின் பக்கவிளைவுகளைக் குறைத்து, மன அழுத்தத்தையும் குறைப்பதாகவும் கூறப்படுகிறது.
சிறிய அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோய் போன்ற தீவிர நிலைகளில் நல்ல பயனளிப்பதாகவும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
உலகிலேயே முதன்முறையாக புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து இங்கிலனது மருத்துவர்கள் இந்தச் சாதனை படைத்துள்ளனர். ஒருமுறை பாதிக்கப்பட்டால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் சவால் அளிக்க கூடிய இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளது பாராட்டுதலுக்குரியதாக உள்ளது.
இங்கிலாந்து பொதுச்சுகாதார அமைப்பின் கண்டுபிடிப்பும் அதன் செயல்பாடும்!
புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தேசிய சுகாதார சேவை எனும் பொதுச்சுகாதார அமைப்பு புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஊசியைக் கண்டுபிடித்துள்ளது. இது குறைந்து 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை செலவாகும் நிலையில், நோயாளியின் ரத்த நாளத்தைக் கண்டறிய முடியாத போது இந்த நேரம் மேலும் அதிகரிக்கலாம்.
தற்போது இங்கிலாந்து கண்டறிந்துள்ள இந்த ஊசி அவ்வளவு நேரம் எடுக்காது. மருத்துவ நடைமுறைகளுக்காக 7 நிமிடங்கள் போதும் என கூறப்படுகிறது. அட்டிசோலிஸ்ஜுபமாப் (Atezolizumab) உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை தூண்டி, புற்று பாதித்த செல்களை அழிக்கிறது.
நுரையீரல் மார்பகம் கல்லீரல் மற்றும் கணையப் புற்றுக்கு ஆளானவர்கள் மத்தியில் இந்த ஊசி மருந்து வெற்றிகரமான நிரூபிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களின் நேரத்தைக் குறைக்கும் என்பதால் இது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
புற்றுநோய் நோயெதிர்ப்பு சிகிச்சை ஊசி.. ஒரு டோஸின் விலை இத்தனை லட்சமா?
இந்தியாவிலும் இந்த 7 நிமிட புற்று நோய் தடுப்பூசி அறிமுகமாகியுள்ளது. இப்புதிய நோயெதிர்ப்பு சிகிச்சை ஊசி நுரையீரல் சிகிச்சையை மாற்றக்கூடும் என்றாலும் இந்த டோஸின் விலை ரூ.3.7 லட்சம் எனவும், நோயாளிகளுக்கு 6 டோஸ் வரையிலும் தேவைப்படலாம் என தகவல் வெளியாகிறது.
இந்த சிகிச்சை இந்தியாவில் கண்டறியப்படும் நுரையீரல் புற்றுநோயாளிகளில் பெரும்பான்மையாக உள்ள நான் – ஸ்மால் செல் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என கூறப்படுகிறது.
இந்த சிகிச்சை முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் பொருந்தாது
இந்த சிகிச்சை முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் பொருந்தாது எனவும், இது PD-L 1 ஏற்பிகளை குறிப்பாக குறிவைக்கும் ஒரு நேயெதிர்ப்பு சிகிச்சை மருந்து, எனவே பெரும்பாலான புற்றுநோய் செல்களில் இந்த ஏற்பிகளை கொண்டிருப்பவர்களை மட்டுமே இந்தச் சிகிச்சைக்கு தகுதியானவர்கள் என கூறப்படுகிறது.
மேலும், நுரையீரல் புற்றுநோயாளிகளின் வாழ்வையும் நோய் பரவாமல் இருக்கும் காலத்தையும் அதிகரிப்பதுடன், இறப்பு அபாயத்தையும் இது குறைப்பதாக கூறப்படுகிறது.
இந்த மருந்தின் தோலடி வடிவத்தை மருத்துவமனை வெளி நோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெற்ற நர்ஸல், ஊசி மூலம் நோயாளிகளின் தொடையில் ஏழு நிமிடத்தில் செலுத்த முடியும்.
நரம்பு வழி உட்செலுத்துதல் செய்யப்பட்டும் நேரத்தில் குறைந்தபட்சம் ஐந்து நோயாளிகளுக்காவது இந்த தோலடி ஊசியைப் பெற முடியும் எனவும், இதில் ஐந்து நோயாளிகளில் நாங்கு பேர் நரம்பு வழி ஊசியை உட்செலுத்துவதைவிட தோலடி உட்செலுத்துதலையே விரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
ஒரு நோயாளிக்கு எத்தனை டோஸ்கள் தேவைப்படும்?
மேலும், இந்த மருந்தின் ஒரு டோஸ் ரூ.3.7 லட்சம் என்பது அதிகம் என்பதாலும், ஒரு நோயாளிக்கு 6 டோஸ்கள் வாய் தேவைப்படுவதாலும், இந்தச் செலவை குறைக்கவும், நோயாளிகள் இதை எளிதில் பெறவும் உதவித் திட்டம் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகிறது.
மேலும், நரம்பு வழி செலுத்தும் செயல்முறையில் தேவைப்படும் 1200 மில்லிகிராம் என்ற அளவைக்காட்டிலும், தோலடி வழி செலுத்தும் செயல்முறையில் உயிரியல் சமனான மருந்தளவு அதிகம் – 1800 மில்லி கிராமாக உள்ளது. இந்த இரண்டிற்கும் இடையிலான தொகையும் 30 ஆயிரம் வரை அதிகம் என தகவல் வெளியாகிறது.
புற்றுநோய் செல்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் இருந்து தங்களை மறைத்துக் கொள்ளும் திறனைப் பறிப்பதன் மூலமாக புற்று நோய் செல்களைக்கட்டுப்படுத்த இந்த ஏடெசோலிஷுமாய் (Atezolizumab) உதவுகிறது.
இது நோயெதிப்பு செல்கள் அச்செல்களைக் கண்டறிந்து தாக்க முடிகிறது. டி செல்கள் நோயெதிர்ப்பு செல்கள் உடலைச் சுற்றி வந்து இயல்புக்கு மாறான செல்களை அழிக்கின்றன. ஆனால் பல புற்றுநோய் செல்கள் மேற்பரப்பிற்கு வந்து பிடி.எல் 2 எனும் ஒரு புரதத்தை வெளிப்படுத்துவதன் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன.
ஏடெசோலிஷுமாப் PD-L 1 புரதத்துடன் இணைந்து எப்படி இயங்குகிறது?
இப்புரதம் புரதம் டி செல்களில் இருக்கும் ஏற்பிகளுடன் பிணைந்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்க வேண்டாம் என கூறும் ஒரு தவறான சிக்னலை அனுப்புகிறது. இதனால் புற்றுநோயால் கட்டுப்பாடின்றி வளர முடிகிறது. ஏடெசோலிஷுமாப் PD-L 1 புரதத்துடன் இணைந்து இந்த இடைவினையை தடுப்பதன் மூலம் இயங்குகிறது.
இந்தச் செயலிழப்பு சமிக்ஞை தடுக்கப்பட்ட உடன் டி செல்கள் புற்று நோய் செல்களைத் கேடு செய்பவையாக அடையாளம் கண்டு மீண்டும் இயங்குகின்றன. இவ்விதம் மீண்டும் தொடங்கும் நோயெதிப்பு செல்கள் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கின்றன.
நடைமுறையில் உள்ள சிகிச்சை முறைகளை மாற்றாது..
இது புற்றுநோய் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஒரு பெரும் முன்னேற்றத்தை கொடுத்து உதவுதாக கூறப்படுகிறது. மேலும் முறையான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு NSCLS நோயாளிகளில் பாதிப்பேர் இந்த சிகிச்சைக்குத் தகுதி பெறக்கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் ஏழு நிமிட புற்றுநோய் சிகிச்சையை ஊசி மூலம் குறிப்பிடத்தக்க வாக்குறுதிகள் கூறினாலும், தற்போது நடைமுறையில் உள்ள புற்றுநோய் சிகிச்சை முறைகளை முழுமையாக மாற்றாது எனவும் குறிப்பிடப்படுகிறது.
REFERENCE LINKS
https://impressivetimes.com/life-style/india-7-minute-cancer-immunotherapy-injection-launch/





















